< வெளிப்படுத்தின விசேஷம் 11 >
1 ௧ பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்.
И даде ми се трска као палица говорећи: Устани и измери цркву Божију и олтар, и оне што се клањају у њој;
2 ௨ ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள்.
А порту што је изван цркве, избаци напоље, нити је мери, јер је дана незнабошцима; и град свети газиће четрдесет и два месеца.
3 ௩ என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
И даћу двојици својих сведока, и прорицаће хиљаду и двеста и шездесет дана обучени у вреће.
4 ௪ பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
Ови су две маслине и два жишка што стоје пред Господарем земаљским.
5 ௫ ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும்.
И ако им ко неправду учини, огањ излази из уста њихових, и појешће непријатеље њихове; и ко буде хтео да им учини нажао онај ваља да буде убијен.
6 ௬ அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
И ови ће имати власт да затворе небо, да не падне дажд на земљу у дане њиховог прорицања; и имаће власт над водама да их претварају у крв, и да ударе земљу сваком муком, кадгод буду хтели.
7 ௭ அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos )
И кад сврше сведочанство своје, онда ће звер што излази из бездана учинити с њима рат, и победиће их и убиће их. (Abyssos )
8 ௮ அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும்.
И телеса њихова оставиће на улици града великог, који се духовно зове Содом и Мисир, где и Господ наш разапет би.
9 ௯ மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள்.
И гледаће неки од народа и племена и језика и колена телеса њихова три дана и по, и неће дати да се њихова телеса метну у гробове.
10 ௧0 அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
И који живе на земљи, обрадоваће се и развеселиће се за њих, и слаће даре један другом, јер ова два пророка мучише оне што живе на земљи.
11 ௧௧ மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது.
И после три дана и по дух живота од Бога уђе у њих; и сташе оба на ноге своје, и страх велики нападе на оне који их гледаху.
12 ௧௨ இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள்.
И чуше глас велики с неба, који им говори: Изиђите амо. И изиђоше на небо на облацима, и видеше их непријатељи њихови.
13 ௧௩ அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
И у тај час затресе се земља врло, и десети део града паде, и тресење земље поби седам хиљада имена човечијих; и остали се уплашише, и даше славу Богу небеском.
14 ௧௪ இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது.
Зло друго прође, ево зло треће иде брзо.
15 ௧௫ ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn )
И седми анђео затруби и посташе велики гласови на небесима говорећи: Поста царство света Господа нашег и Христа Његовог, и цароваће ва век века. (aiōn )
16 ௧௬ அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து:
И двадесет и четири старешине које сеђаху пред Богом на престолима својим, падоше на лица своја и поклонише се Богу.
17 ௧௭ “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.
Говорећи: Хвалимо Те, Господе Боже Сведржитељу, који јеси, и беше, и бићеш, што си примио силу своју велику, и царујеш.
18 ௧௮ தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
И незнабошци се прогневише, и дође гнев Твој и време мртвима да се суди, и да се да плата слугама Твојим, пророцима и светима, и онима који се боје имена Твог, малима и великима, и да се погубе они који земљу погубише.
19 ௧௯ அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது.
И отвори се црква Божија на небу, и показа се ћивот завета Његовог у цркви Његовој; и бише севања муња, и гласови, и громови, и тресење земље, и град велики.