< சங்கீதம் 99 >

1 யெகோவா ராஜரிகம்செய்கிறார், மக்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார், பூமி அசைவதாக.
יהוה מלך ירגזו עמים ישב כרובים תנוט הארץ׃
2 யெகோவா சீயோனில் பெரியவர், அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
יהוה בציון גדול ורם הוא על כל העמים׃
3 மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.
יודו שמך גדול ונורא קדוש הוא׃
4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
ועז מלך משפט אהב אתה כוננת מישרים משפט וצדקה ביעקב אתה עשית׃
5 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவர் பாதத்தைப் பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.
רוממו יהוה אלהינו והשתחוו להדם רגליו קדוש הוא׃
6 அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும், அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.
משה ואהרן בכהניו ושמואל בקראי שמו קראים אל יהוה והוא יענם׃
7 மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
בעמוד ענן ידבר אליהם שמרו עדתיו וחק נתן למו׃
8 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்; நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.
יהוה אלהינו אתה עניתם אל נשא היית להם ונקם על עלילותם׃
9 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி, அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.
רוממו יהוה אלהינו והשתחוו להר קדשו כי קדוש יהוה אלהינו׃

< சங்கீதம் 99 >