< சங்கீதம் 98 >

1 பாடல். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
請眾向上主歌唱新歌,因為祂行了奇事。祂的右手和祂的聖臂為祂獲得了勝利。
2 யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி, தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார்.
上主已經宣佈了自己的救恩,將自己的正義已啟示給萬民。
3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.
上主記起自己的良善和忠誠,即向以色列家族廣施的寬仁。全球看見了我們天主的救恩。
4 பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
普世大地,請向上主歌舞,請踴躍,請歡樂,彈琴演奏:
5 சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள், சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.
彈著豎琴,向上主讚頌,彈著豎琴,伴隨著絃韻。
6 யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
吹起喇叭,伴奏著號角,在上主面前謳歌。
7 கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
海洋及其中的一切澎湃,寰宇的居民驚駭!
8 யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி, மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.
江河拍手鼓掌,山岳舞蹈歌唱。
9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; உலகத்தை நீதியோடும் மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
都在上主面前歡樂,因為祂已駕臨是要統治大地乾坤;祂以正義審判普世人群,祂要以公平治理天下萬民。

< சங்கீதம் 98 >