< சங்கீதம் 97 >
1 ௧ யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழட்டும்.
Mifehe t’Iehovà, hirebeke ty tane toy, hifale o tokonose maroo.
2 ௨ மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
Ie arikoboñen-drahoñe naho hamoromoroñañe; havantañañe naho ty hatò ro ioreña’ i fiambesa’ey.
3 ௩ நெருப்பு அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.
Miaolo Aze ty afo, mamorototo o rafelahi’eo mb’etia mb’eroa.
4 ௪ அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
Nihazavae’ o hela’eo ty voatse toy; niisa’ ty tane toy le nihondrahondra.
5 ௫ யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
Nitranake hoe karafo o vohitseo ami’ty niatrefa’ Iehovà, añatrefa’ i Talè’ ty tane toy iaby.
6 ௬ வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
Mitalily ty havantaña’e o likerañeo, vaho fonga mahaoniñe ty enge’e ondatio.
7 ௭ சிலைகளை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
Hene salatse ze mitoron-tsare sokitse, o misenge raha kòakeo; miambanea ama’e ry ndrahare iabio!
8 ௮ சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
Nahajanjiñe ty Tsiône le niehake, nirebeke o anak’ampela Iehodào, ty amo fizaka’oo ry Iehovà.
9 ௯ யெகோவாவே, பூமி அனைத்திற்கும் நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
Amy te Ihe, ry Iehovà, ro Andindimone’ ty tane toy; vaho onjoneñe andigiligi’ ze hene ndrahare irehe.
10 ௧0 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
Hejeo o haratiañeo ry mpikoko Iehovà; ambena’e ty fiai’ o noro’eo, avotso’e an-taña’ o lo-tserekeo.
11 ௧௧ நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
Ararake ho a’ o vantañeo ty hazavàñe, ho a’ o mahity arofoo ty hafaleañe.
12 ௧௨ நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
Mirebeha am’ Iehovà, ry vantañeo, vaho andriaño i tahina’e masiñey.