< சங்கீதம் 96 >
1 ௧ யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.
Śpiewajcie PANU nową pieśń, śpiewaj PANU, cała ziemio!
2 ௨ யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.
Śpiewajcie PANU, błogosławcie jego imię, opowiadajcie o jego zbawieniu dzień po dniu.
3 ௩ தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
Głoście wśród narodów jego chwałę, wśród wszystkich ludów jego cuda.
4 ௪ யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
Wielki bowiem jest PAN i godny wszelkiej chwały, straszliwszy nad wszystkich bogów.
5 ௫ எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர்.
Gdyż wszyscy bogowie narodów [są] bożkami, a PAN uczynił niebiosa.
6 ௬ மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
Cześć i majestat przed jego obliczem, moc i piękno w jego świątyni.
7 ௭ மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
Oddajcie PANU, rodziny narodów, oddajcie PANU chwałę i moc.
8 ௮ யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.
Oddajcie PANU chwałę jego imienia, przynieście dary i wejdźcie do jego przedsionków.
9 ௯ பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; பூமியில் உள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
Oddajcie PANU pokłon w ozdobie świętości, niech cała ziemia drży przed nim.
10 ௧0 யெகோவா ராஜரிகம்செய்கிறார், ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள்.
Mówcie wśród pogan: PAN króluje; świat będzie utwierdzony, aby się nie poruszył, i [on] będzie sądził ludzi sprawiedliwie.
11 ௧௧ வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
Niech się weselą niebiosa i niech raduje się ziemia; niech zaszumi morze i to, co w nim jest.
12 ௧௨ நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
Niech radują się pola i wszystko, co jest na nich, wtedy [radośnie] wykrzykną wszystkie drzewa leśne;
13 ௧௩ அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியோடும், மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Przed obliczem PANA, bo idzie, zaprawdę idzie, aby sądzić ziemię. Będzie sądził świat w sprawiedliwości, a narody w swojej prawdzie.