< சங்கீதம் 93 >
1 ௧ யெகோவா ஆளுகை செய்கிறார், மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
Gospod kraljuje, oblečen je z veličanstvom; Gospod je oblečen z močjo, s katero se je opasal. Tudi zemeljski [krog] je utrdil, da ne more biti omajan.
2 ௨ உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; நீர் என்றென்றும் இருக்கிறீர்.
Tvoj prestol je utrjen od davnine. Ti si od večnosti.
3 ௩ யெகோவாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.
Reke so se dvignile, oh Gospod, reke so povzdignile svoj glas, reke so dvignile svoje valove.
4 ௪ திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
Gospod na višavi je mogočnejši kakor glas mnogih vodá, da, kakor mogočni valovi morja.
5 ௫ உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.
Tvoja pričevanja so zelo zanesljiva. Svetost se spodobi tvoji hiši, oh Gospod, na veke.