< சங்கீதம் 92 >
1 ௧ ஓய்வுநாளின் பாடல். யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,
Псалом песни, в день субботный. Благо есть исповедатися Господеви и пети имени Твоему, Вышний:
2 ௨ பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
возвещати заутра милость Твою и истину Твою на всяку нощь,
3 ௩ காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.
в десятоструннем псалтири с песнию в гуслех.
4 ௪ யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.
Яко возвеселил мя еси, Господи, в творении Твоем, и в делех руку Твоею возрадуюся.
5 ௫ யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
Яко возвеличишася дела Твоя, Господи: зело углубишася помышления Твоя.
6 ௬ மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.
Муж безумен не познает, и неразумив не разумеет сих.
7 ௭ துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
Внегда прозябоша грешницы яко трава, и проникоша вси делающии беззаконие, яко да потребятся в век века:
8 ௮ யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
Ты же вышний во век, Господи.
9 ௯ யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.
Яко се, врази Твои, Господи, яко се, врази Твои погибнут, и разыдутся вси делающии беззаконие.
10 ௧0 என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.
И вознесется яко единорога рог мой, и старость моя в елеи мастите:
11 ௧௧ என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.
и воззре око мое на враги моя, и востающыя на мя лукавнующыя услышит ухо мое.
12 ௧௨ நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
Праведник яко финикс процветет: яко кедр, иже в Ливане, умножится.
13 ௧௩ யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.
Насаждени в дому Господни во дворех Бога нашего процветут:
14 ௧௪ யெகோவா உத்தமரென்றும், என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,
еще умножатся в старости мастите, и благоприемлюще будут.
15 ௧௫ அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.
Да возвестят, яко прав Господь Бог наш, и несть неправды в Нем.