< சங்கீதம் 91 >
1 ௧ உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
住在至高者隐密处的, 必住在全能者的荫下。
2 ௨ நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
我要论到耶和华说: 他是我的避难所,是我的山寨, 是我的 神,是我所倚靠的。
3 ௩ அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
他必救你脱离捕鸟人的网罗 和毒害的瘟疫。
4 ௪ அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.
他必用自己的翎毛遮蔽你; 你要投靠在他的翅膀底下; 他的诚实是大小的盾牌。
5 ௫ இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,
你必不怕黑夜的惊骇, 或是白日飞的箭,
6 ௬ இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய்.
也不怕黑夜行的瘟疫, 或是午间灭人的毒病。
7 ௭ உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
虽有千人仆倒在你旁边, 万人仆倒在你右边, 这灾却不得临近你。
8 ௮ உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.
你惟亲眼观看, 见恶人遭报。
9 ௯ எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
耶和华是我的避难所; 你已将至高者当你的居所,
10 ௧0 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
祸患必不临到你, 灾害也不挨近你的帐棚。
11 ௧௧ உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
因他要为你吩咐他的使者, 在你行的一切道路上保护你。
12 ௧௨ உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
他们要用手托着你, 免得你的脚碰在石头上。
13 ௧௩ சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
你要踹在狮子和虺蛇的身上, 践踏少壮狮子和大蛇。
14 ௧௪ அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
神说:因为他专心爱我,我就要搭救他; 因为他知道我的名,我要把他安置在高处。
15 ௧௫ அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
他若求告我,我就应允他; 他在急难中,我要与他同在; 我要搭救他,使他尊贵。
16 ௧௬ நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
我要使他足享长寿, 将我的救恩显明给他。