< சங்கீதம் 87 >

1 கோராகின் மகன்களுடைய பாடல். அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
可拉後裔的詩歌。 耶和華所立的根基在聖山上。
2 யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
他愛錫安的門, 勝於愛雅各一切的住處。
3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
上帝的城啊, 有榮耀的事乃指着你說的。 (細拉)
4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும், எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
我要提起拉哈伯和巴比倫人, 是在認識我之中的; 看哪,非利士和泰爾並古實人, 個個生在那裏。
5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
論到錫安,必說: 這一個、那一個都生在其中, 而且至高者必親自堅立這城。
6 யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
當耶和華記錄萬民的時候, 他要點出這一個生在那裏。 (細拉)
7 எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.
歌唱的,跳舞的,都要說: 我的泉源都在你裏面。

< சங்கீதம் 87 >