< சங்கீதம் 86 >
1 ௧ தாவீதின் ஜெபம். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
A PRAYER OF DAVID. Incline, O YHWH, Your ear, Answer me, for I [am] poor and needy.
2 ௨ என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
Keep my soul, for I [am] pious, Save Your servant who is trusting to You, O You, my God.
3 ௩ ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Favor me, O Lord, for I call to You all the day.
4 ௪ உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
Make glad the soul of Your servant, For to You, O Lord, I lift up my soul.
5 ௫ ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.
For You, Lord, [are] good and forgiving, And abundant in kindness to all calling You.
6 ௬ யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
Hear, O YHWH, my prayer, And attend to the voice of my supplications.
7 ௭ நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
In a day of my distress I call You, For You answer me.
8 ௮ ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை.
There is none like You among the gods, O Lord, And like Your works there are none.
9 ௯ ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.
All nations that You have made Come and bow themselves before You, O Lord, And give honor to Your Name.
10 ௧0 தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
For You [are] great, and doing wonders, You [are] God alone.
11 ௧௧ யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
Show me, O YHWH, Your way, I walk in Your truth, My heart rejoices to fear Your Name.
12 ௧௨ என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
I confess You, O Lord my God, with all my heart, And I honor Your Name for all time.
13 ௧௩ நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். (Sheol )
For Your kindness [is] great toward me, And You have delivered my soul from the lowest Sheol. (Sheol )
14 ௧௪ தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.
O God, the proud have risen up against me, And a company of the terrible sought my soul, And have not placed You before them,
15 ௧௫ ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
And You, O Lord, [are] God, merciful and gracious, Slow to anger, and abundant in kindness and truth.
16 ௧௬ என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
Look to me, and favor me, Give Your strength to Your servant, And give salvation to a son of Your handmaid.
17 ௧௭ யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.
Do with me a sign for good, And those hating me see and are ashamed, For You, O YHWH, have helped me, Indeed, You have comforted me!