< சங்கீதம் 85 >
1 ௧ கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
MAIN leowa, kom kotin maki oner japwilim omui jap maj o, o kom kotin dorelar jalidi en Iakop akan.
2 ௨ உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
Re kotin lapwadar me jued en japwilim omui aramaj akan, o kom kotin pwaidier dip arail karoj.
3 ௩ உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
Komui kotin kadukiedi omui onion karoj, o kotin wukidoki wei janer omui onion melel.
4 ௪ எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
Kom kotin puron kamait kit ala, komui Kot at jaunkamaur, o kotin katukeidi omui jokalanan on kit.
5 ௫ என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
Kom pan kotin onioni kit kokolata? Omui onion pan dueduata jan en kainok lel eu?
6 ௬ உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
Kom jota pan kotin puron kamaur kit da, pwe japwilim omui aramaj kan en peren kin komui da?
7 ௭ யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
Main Ieowa, kom kotin kajanjaleda ar kalanan on kit, o jauaja kit?
8 ௮ கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; அவர் தம்முடைய மக்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.
I men ron, da me Kot Ieowa pan kotin majani; pwe a pan mamajani duen mauei mau on japwilim a aramaj o me lelapok kan, pwe ren der lodi on me pweipwei.
9 ௯ நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
Melel, a jauaj me koren ion ir, me majak I, pwe a linan en mi nan jap atail.
10 ௧0 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
Kalanan o melel pan tu pena, pun o muei mau en metik pena.
11 ௧௧ சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
Melel pan wojada jan nan jap o, o pun pan ireredo jan nanlan.
12 ௧௨ யெகோவா நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.
Ieowa pil pan kotikido me mau, pwe jap atail en kida wa kan.
13 ௧௩ நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
Pwe pun pan ti on mo a, o a kak akan pan wiala al arail.