< சங்கீதம் 85 >

1 கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
למנצח לבני-קרח מזמור ב רצית יהוה ארצך שבת שבות (שבית) יעקב
2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
נשאת עון עמך כסית כל-חטאתם סלה
3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
אספת כל-עברתך השיבות מחרון אפך
4 எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
שובנו אלהי ישענו והפר כעסך עמנו
5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
הלעולם תאנף-בנו תמשך אפך לדר ודר
6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
הלא-אתה תשוב תחינו ועמך ישמחו-בך
7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
הראנו יהוה חסדך וישעך תתן-לנו
8 கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; அவர் தம்முடைய மக்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.
אשמעה-- מה-ידבר האל יהוה כי ידבר שלום--אל-עמו ואל-חסידיו ואל-ישובו לכסלה
9 நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
אך קרוב ליראיו ישעו לשכן כבוד בארצנו
10 ௧0 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
חסד-ואמת נפגשו צדק ושלום נשקו
11 ௧௧ சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
אמת מארץ תצמח וצדק משמים נשקף
12 ௧௨ யெகோவா நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.
גם-יהוה יתן הטוב וארצנו תתן יבולה
13 ௧௩ நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
צדק לפניו יהלך וישם לדרך פעמיו

< சங்கீதம் 85 >