< சங்கீதம் 84 >
1 ௧ கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். சேனைகளின் யெகோவாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
Kako su mili stanovi tvoji, Gospode nad silama!
2 ௨ என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
Gine duša moja želeæi u dvore Gospodnje; srce moje i tijelo moje otima se k Bogu živome.
3 ௩ என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
I ptica nahodi kuæu, i lastavica gnijezdo sebi gdje leže ptiæe svoje, kod oltara tvojih, Gospode nad silama, care moj i Bože moj!
4 ௪ உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)
Blago onima koji žive u domu tvom! Oni te hvale bez prestanka.
5 ௫ உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும், தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
Blago onima kojima je (sila) u tebi, i kojima su u srcu putovi tvoji!
6 ௬ அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
Iduæi dolinom plaèevnom, pretvaraju je u izvore, i dažd je odijeva blagoslovima.
7 ௭ அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
Idu zbor za zborom, javljaju se pred Bogom na Sionu.
8 ௮ சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)
Gospode, Bože nad silama! usliši molitvu moju, Bože Jakovljev!
9 ௯ எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும்.
Bože, branièu naš! sagni se i vidi lice pomazanika svojega!
10 ௧0 ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
Jer je bolje jedan dan u dvorima tvojim od hiljade. Volim biti na pragu doma Božijega nego živjeti u šatorima bezbožnièkim.
11 ௧௧ தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.
Jer je Gospod Bog sunce i štit, Gospod daje blagodat i slavu; onima koji hode u bezazlenosti ne ukraæuje nijednoga dobra.
12 ௧௨ சேனைகளின் யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.
Gospode nad silama! blago èovjeku, koji se u te uzda!