< சங்கீதம் 82 >

1 ஆசாபின் பாடல். தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
(아삽의 시) 하나님이 하나님의 회 가운데 서시며 재판장들 중에서 판단하시되
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)
너희가 불공평한 판단을 하며 악인의 낯 보기를 언제까지 하려느냐 (셀라)
3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
가난한 자와 고아를 위하여 판단하며 곤란한 자와 빈궁한 자에게 공의를 베풀지며
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
가난한 자와 궁핍한 자를 구원하여 악인들의 손에서 건질찌니라 하시는도다
5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
저희는 무지무각하여 흑암 중에 왕래하니 땅의 모든 터가 흔들리도다
6 நீங்கள் தெய்வங்கள் என்றும், நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
내가 말하기를 너희는 신들이며 다 지존자의 아들들이라 하였으나
7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
너희는 범인 같이 죽으며 방백의 하나 같이 엎더지리로다
8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
하나님이여, 일어나사 세상을 판단하소서 모든 열방이 주의 기업이 되겠음이니이다

< சங்கீதம் 82 >