< சங்கீதம் 80 >
1 ௧ எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் பாடல். இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும்.
KOMUI jile pan Ijrael, kotin mani; komui me kin apapwali Iojep dueta jip akan. Kom kotido, me kaipokedi pon anin Kerup.
2 ௨ எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களைக் காப்பாற்ற வந்தருளும்.
Kom kotin kajaleda omui manaman mon Epraim, o Peniamin, o Manaje, o kotido, pwen jauaja kit!
3 ௩ தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Main Kot Jepaot, kom kotin kamait kit ala o kotin kajaleda jilan omui, kit ap pan kelail kida.
4 ௪ சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
Ieowa Kot Jepaot, arai da, kom pan kotin onioniki kapakap en japwilim omui aramaj akan?
5 ௫ கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
Kom kin kotin kamana kin ir prot en pil en maj, o kom kin kanim pile kin irail pil en maj toto.
6 ௬ எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள்.
Kom kotin wiai on kit, me men imp at kin akamaiki on kit, o imwintiti pat kin lalaue kit.
7 ௭ சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Kot Jepaot, kom kotin kamait kit ala o kotin kajaleda jilan omui, kit ap pan kelail kida.
8 ௮ நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
Kom kotin wado janer Akipten tuka wain pot, o kom kokojan men liki kan, ap id padukedi i
9 ௯ அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
Kom kotin kokoi on i al a o kawojada i, pwen kadirela jap o.
10 ௧0 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.
Nana kan mi pan mot a, o ra kan kadupaledi jedern en Kot.
11 ௧௧ அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.
Kom kotin kalaudelar i lel on madau o ra kan lel ni pilap o.
12 ௧௨ இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
Da me kom kotin kawe kilar a kel, pwe karoj me dauli kin kawela?
13 ௧௩ காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
Pwik laualo dekadar, o man en nan jap kawelar.
14 ௧௪ சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;
Main Kot Jepaot, kom kotin wukedoke don kit, o ireredo jan nanlan, o majani, o kotin jauaja tukan wain pot et,
15 ௧௫ உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.
O kotin apapwali i, me lim omui padukedier, o me kom kotin apapwalier.
16 ௧௬ அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.
A ron kilar kijiniai, a paledier, re okilar majan en jilan omui.
17 ௧௭ உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.
Lim omui apwali ol en pali maun omui, o irail, me kom kotin apapwalier.
18 ௧௮ அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம்.
Kit ap jota pan wuki wei jan komui. Kom kotin kamaur kit da, kit ap pan kapina mar omui.
19 ௧௯ சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Ieowa Kot Jepaot, kom kotin kamait kit ala o kotin kajaleda jilan omui, kit ap pan kelail kida.