< சங்கீதம் 8 >
1 ௧ கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
Ry Iehovà, Talè’ay, Oakitia! ty havolonahe’ i Tahina’oy manitsike ty tane toy, napò’o ambonen-dikerañe eñe ty enge’o!
2 ௨ விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர்.
Boak’am-bava’ o ajaja-menao naho o ajaja minonoo ty nampijadoña’o haozarañe, ty amo malaiñe Azoo, hampiànjiña’o o rafelahio naho o mpamale-fateo.
3 ௩ உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
Ie haraharaeko o likera’oo, ty fitoloñan-drambom-pità’o, i volañey naho o vasiañe najado’oo.
4 ௪ மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
Ino ondatio, te itsakorea’o? Naho ty ana-ondaty, te haoñe’o?
5 ௫ நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
Fe nanoe’o ambanevane’ o anjelio, naho sinabàka’o engeñe naho asiñe.
6 ௬ உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
Nampifehè’o aze o tolom-pità’oo; kila narongo’o ambanem-pandia’e ao,
7 ௭ ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
Ze hene añondry naho añombe; eka, o biby an-kivokeo:
8 ௮ ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
O voron-dikerañeo, o fian-driakeo, ze misoroke o lalan-driakeo.
9 ௯ எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
Ry Iehovà, Talè’ay, Oasirity! ty volonahen-Tahina’o manitsike ty tane toy.