< சங்கீதம் 78 >

1 ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல். என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
KOMAIL nai aramaj akan, ron ai kujoned; komail kapaike don jalon omail padak en au ai!
2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
I pan ki pajan au ai, pwen padak, o pan kida kajoi en maj o,
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
Me kitail ronadar o ajaer, o jam atail kajoi on kitail er,
4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
Pwe kitail ender karirila jan kadaudok arail, me pan pwarado mur, o kaparokki wau en leowa, o a manaman o a dodok kapuriamui kan.
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
Pwe a kotin kauada men kataman eu ren Iakop, o kotikida kapun eu ren men Ijrael, me u kotin kakaliki on jam atail akan, pwe ren ujelan nair jeri kan,
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
Pwe di en mur en aja due, o jeri ko, me pan ipwidi; o ni ar kokoda, ren pil kajoi on nair jeri kan
7 தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
Pwe irail en kaporoporeki Kot, o ren der monokela en Kot a wiwia kan, o ren kapwaiada a kujoned akan.
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
O ren der dueta jam arail akan, me kainok kanudi o katiwo eu, me monion arail jota teneten, o nen arail jota melel on Kot.
9 ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
Dueta kainok Epraim, me wa tatan mauin, ap purela jan nan pei.
10 ௧0 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
Irail jota dadaurata inau en Kot, o re jota men weweideki duen a kujoned akan.
11 ௧௧ அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
O re monokelar a wiawia kan o a manaman akan, me a kotin kajaljale on irail er.
12 ௧௨ அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
A kotin wiadar manaman akai janjal mon jam arail akan nan Akipten, nan jap Joan.
13 ௧௩ கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
A kotin palan pajan madau o kotin mueid on ir, en kotela, o wiadar pil dueta kel takai eu.
14 ௧௪ பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
A kotin kalua kin irail tapik ni ran o, o ni pon umpul en kijiniai.
15 ௧௫ பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
A kotin palan pajan paip nan jap tan o kanim pile kin irail pil toto.
16 ௧௬ கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
O a kotin kapkapwile wei pilap kai jan nan paip, pwe ren pwile wei dueta pilap laud akan.
17 ௧௭ என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.
Ari jo, re dadaurata ni arail didi on I, o re kaonioni me Lapalap o nan jap tan.
18 ௧௮ தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
O re kajonejon Kot nan monion arail, ni ar inon ion kan arail mana.
19 ௧௯ அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
O re palian Kot ni ar inda: Melel Kot pan kak wiada tepel eu nan jap tan?
20 ௨0 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.
Kilan, a poki paip o, pe pil en pwarado o pilap akan pwilepwile wei, a iaduen, a pan kak kida prot o uduk on na aramaj akan?
21 ௨௧ ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
Ieowa lao manier mepukat, ap kotin onionadar, o kijiniai wiauier ren Iakop, o onion lel on Ijrael,
22 ௨௨ யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
Pweki ar jo kamelele Kot, o jota kaporoporeki a jauaj.
23 ௨௩ அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
A ap kotin majani on tapok en poa kan, o ritinida wanim on lan akan.
24 ௨௪ மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
O kotin kamoredi on ir mana, pwe ren mana, o a kotiki on ir prot en lan.
25 ௨௫ தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
Irail kanalar prot en tounlan kan; a kotin kadar on ir kijin mana toto.
26 ௨௬ வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
A kotin kapwaredar pan lan an en maj en lan, o ni a manaman a kotin kamokidada an en pali air.
27 ௨௭ இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
O a kotin kamoredi on ir uduk dueta pwel par, o manpir dueta pik en oror.
28 ௨௮ அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
O a kotin kapup irail di waja karoj, me irail kaujon ia.
29 ௨௯ அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
Rap manamana o medilar kaualap, o a kotin mueid on ir ar inon.
30 ௩0 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
A ni ar kapwaiadar ar inon, o ni ar manamana.
31 ௩௧ தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
Onion en Kot ap lel on irail er, o kamelar ol lapalap re’rail, o kotin wokiedi mana kap en Ijrael kajampwal akan.
32 ௩௨ இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
A re kalaudelar arail dip, o re jota kamelele a manaman akan.
33 ௩௩ ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
I me a kotin mueidoki ren mela, re jota paida, o ar apwal akan me toto arain ar maur.
34 ௩௪ அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
Ni a kotin kame irail la, rap idok i, o wukila, o rapaki Kot.
35 ௩௫ தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
O re tamandar, me Kot kele parail o Kot lapalap ar jaundor.
36 ௩௬ ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
O re lik janjal mau on i ni au arail o re likam on i ni lo ar.
37 ௩௭ அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
A monion arail jota teneten on i, o re jota dadaurata melel a inau.
38 ௩௮ அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
Ari jo, a kotin kalanan on ir, o kotin makeki on ir dip arail, o jota kame irail la, o katukiedi a onion pan pak toto, o jota onioni melel.
39 ௩௯ அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
Pwe a kotin kupura, me irail pali uduk, dueta kijinian, me pir wei o jolar puredo.
40 ௪0 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
Pan pak toto re kanudi on i nan jap tan, o kakupur juedi i nan mal.
41 ௪௧ அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
Irail pur on anjau karoj kajonejon Kot, o re akapuni on me Jaraui ren men Ijrael.
42 ௪௨ அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
Re jolar tamanda lim a manaman, me dore ir ala jan ar imwintiti kan ni ran o.
43 ௪௩ அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
Duen a kotin wiadar a manaman akan nan Akipten o a dodok kapuriamui nan Joan.
44 ௪௪ அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
A kotin kawuki on nta ar pil akan, rap jolar kak nima jan ar pilap akan.
45 ௪௫ அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
Ni a kotin kapwaredar man jued akan nan pun arail, me kan ir ala, o proj akan, me kawe ir ala.
46 ௪௬ அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
A kotiki on muedi ar tuka kan, o ar wantuka on man jiek.
47 ௪௭ கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
A kotin kawekilar akel ar wain o tuka kan ki akel tikitik.
48 ௪௮ அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
A kotin kamekila ar man akel akan o ar pwin man akan liol.
49 ௪௯ தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
A kotin onion melel o porone won ir tounlan jued kai, o mueid on ir, ren linaranar, o morjued, o kainjenjued.
50 ௫0 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
A kotin kaonopa dan onion al apot, o jota dorelar maur arail jan mela, o kotin mueid on kilitop ni maur arail.
51 ௫௧ எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
A kotin kamelar mejeni karoj nan Akipten, mejeni en ar kelail nan im en Am akan.
52 ௫௨ தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
A kotin kaluala japwilim a kan dueta pwin jip eu nan jap tan.
53 ௫௩ அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
A kotin kalua irail ni pun, pwe ren der majak meakot, a madau kadupaledi ar imwintiti kan.
54 ௫௪ அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
A kotin wa ir ala lel ni irair en jap jaraui, lel nana wet, me lim a pali maun kileledier.
55 ௫௫ அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
O kotin pakipaki men liki kan mo’rail, o kotin nek on ir jap arail, pwen jojoki, o a kotiki on kainok en Ijrael akan, en kaukaujon nan im arail.
56 ௫௬ ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
A re jonejon? o kaonion Kot lapalap, o jota peiki on i, o jota duki on a majan akan.
57 ௫௭ தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
O re muei jan o mamaleki meakaroj, dueta jam arail akan, o re jota teneten, dueta kajik katieu luet eu.
58 ௫௮ தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
O re kaonion i ni ar kaudok pon dol akan, o re kupur juedeki i ki arail dikedik en ani kan.
59 ௫௯ தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
A Kot lao kotin mani mepukat, ap kotin onionada o kajapok ir ala melel.
60 ௬0 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
A kotin muei jan tanpaj a nan Jilo, im pwal o, waja a kotikot ia ren aramaj akan.
61 ௬௧ தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
A kotiki wei japwilim akan nan imaten, o a linan nan pa en imwintiti kan.
62 ௬௨ தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
A kotiki wei japwilim a aramaj akan ni kodlaj, o kotin onioni japwilim a jojo.
63 ௬௩ அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
Kijiniai kanala ar manakap akan, o ar peinekap akan jolar kak papaud.
64 ௬௪ அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
Arail jamero kan mekilar kodlaj, a jolar li odi kan, me kin maiei.
65 ௬௫ அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
Ieowa ap kotin opala waja dueta amen me mairelar, dueta ol komad amen kin nijinij ni a kan wain.
66 ௬௬ தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
A kotin kaloedier a imwintiti kan o kanamenok ir ala kokolata.
67 ௬௭ அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
A kotin kajelar im en Iojep, o jota piladar kainok en Epraim.
68 ௬௮ யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
Pwe a kotin piladar kainok en Iuda, kol Jion, me a koti kupura.
69 ௬௯ தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
O a kotin kauadar tanpaj a im jaraui waja ileile, dueta jappa me pan teneten ea kokolata.
70 ௭0 தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
Ap kotin piladar japwilim a ladu Dawid, o a kotin ale i jan nan deun jip akan.
71 ௭௧ கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
A kotin kalua i jan ren jip en kadidi kan, pwen kamana japwilim a kainok en Iakop o a jojo men Ijrael.
72 ௭௨ இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
O a kotin apapwali ir ni tiak en monion melel o pun, o kakaun irail ada ni koiok en lim a kan.

< சங்கீதம் 78 >