< சங்கீதம் 77 >
1 ௧ எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல். நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 ௨ என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.
Amy andro nahampohek’ ahiy t’ie nipay i Talè; an-taña nahity, tsy nigebañe te haleñe; nifoneñe tsy hohòeñe ty foko.
3 ௩ நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)
Ie mahatiahy iraho, ry Andrianañahare le mitretretretre, ie tsakorèko, le mitoirañe ty troko. Selà
4 ௪ நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.
Tana’o tsy hikòpoke o holi-masokoo; embetse iraho tsy mahafivolañe.
5 ௫ ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
Nereñereko o andro taoloo, o taoñe haehaeo,
6 ௬ இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
Tiahiko o nititihako an-kaleñeo; mifañaoñe ami’ty troko iraho, le hoe ty fitsakorean-troko:
7 ௭ ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?
Haitoa’ i Talè zafe-anake hao? le lia’e tsy hisohe’e hao?
8 ௮ அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?
Fa modo kitro añ’afe’e hao ty fiferenaiña’e? Fa nilesa kitro-katroke hao i nampitamae’ey?
9 ௯ தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)
Nihaliñon’Añahare hao ty fatariha’e? nagabe’e an-kaviñerañe ao hao i fitretreza’ey? Selà
10 ௧0 அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.
Le hoe raho: Zao ty halemeako: Ie ataoko ho mete miova ty fitàn-kavana’ i Andindimoneñey.
11 ௧௧ யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
Ho tiahiko ty fitoloña’ Ià, hahatsikaitse o raha tsitantane nanoe’o haehaeo.
12 ௧௨ உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
Ho hene tsakorèko o fitoloña’oo, hereñerèko o tolon-draha’oo.
13 ௧௩ தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
Ry Andrianañahare, masiñe ty lala’o; ia ty ndrahare ra’elahy hañirinkiriñe aman’ Añahare?
14 ௧௪ அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.
Ihe ro Andrianañahare mitolon-kalatsàñe! fa naboa’o am’ ondatio ty haozara’o.
15 ௧௫ யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)
Nijebañem-pità’o ondati’oo, o tarira’ Iakobe naho Iosefeo. Selà
16 ௧௬ தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
Nahatrea Azo o ranoo, ry Andrianañahare, ie nahatrea azo i ranoy le nivalitaboake! nitabohazake i lalekey.
17 ௧௭ மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
Nampikojojoake orañe o rahoñeo; nigorogodoiñe i likerañey, nimb’etia mb’atia ka o ana-pale’oo.
18 ௧௮ உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
Tam-po’ i tangololahiy ty fivola’ i ampi’oy; nampireandreañe’ i helatsey ty voatse toy! nihondrahondra naho niozoñozoñe ty tane toy.
19 ௧௯ உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
Nitoañe’ i lala’oy i riakey, i rano jabajabay ty nilalan-tsile’o; vaho tsy nioniñe o liam-pandia’oo.
20 ௨0 மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.
Narahe’o hoe lia-raike ondati’oo, am-pità’ i Mosè naho i Aharone.