< சங்கீதம் 76 >
1 ௧ அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
Přednímu z kantorů na neginot, žalm Azafův a píseň. Znám jest Bůh v Judstvu, a v Izraeli veliké jméno jeho.
2 ௨ சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
V Sálem jest stánek jeho, a obydlé jeho na Sionu.
3 ௩ அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
Tamť jest polámal ohnivé šípy lučišť, pavézu a meč, i válku. (Sélah)
4 ௪ மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
Slavný jsi učiněn a důstojný horami loupeže.
5 ௫ தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
V loupež dáni jsou udatní srdcem, zesnuli snem svým, aniž nalezly zmužilé hrdiny síly v rukou svých.
6 ௬ யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
Od žehrání tvého, ó Bože Jákobův, i vůz i kůň tvrdě zesnuli.
7 ௭ நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
Ty jsi, ty velmi hrozný, a kdo jest, ješto by před tebou ostál v rozhněvání tvém?
8 ௮ நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது,
Když s nebe dáváš slyšeti výpověd svou, země se bojí a tichne,
9 ௯ வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
Když povstává k soudu Bůh, aby zachoval všecky pokorné na zemi. (Sélah)
10 ௧0 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
Zajisté i hněv člověka chváliti tě musí, a ostatek zůřivosti skrotíš.
11 ௧௧ பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
Sliby čiňte a plňte Hospodinu Bohu vašemu; kteřížkoli jste vůkol něho, přinášejte dary Přehroznému.
12 ௧௨ பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Onť odjímá ducha knížatům, a k hrůze jest králům zemským.