< சங்கீதம் 72 >
1 ௧ தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
Боже, дај цару суд свој, и правду своју сину царевом:
2 ௨ அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
Он ће судити народу Твом по правди, и невољницима Твојим по правици.
3 ௩ மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.
Родиће народу горе миром, и хумови правдом.
4 ௪ மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
Он ће судити невољнима у народу, помоћи ће синовима ништега, и насилника ће оборити,
5 ௫ சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
Бојаће се Тебе док је сунца и месеца, од колена до колена.
6 ௬ புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
Сићи ће као дажд на покошену ливаду, као капље које порашају земљу.
7 ௭ அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
Процветаће у дане његове праведник и свуда мир докле тече месеца.
8 ௮ ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
Владаће од мора до мора, и од реке до крајева земаљских.
9 ௯ வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.
Пред њим ће попадати дивљаци, и непријатељи његови прах ће лизати.
10 ௧0 தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
Цареви тарсиски и острвљани донеће даре, цареви шавски и савски даће данак.
11 ௧௧ எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.
Клањаће му се сви цареви, сви народи биће му покорни.
12 ௧௨ கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
Јер ће избавити убогога који цвили и невољнога који нема помоћника.
13 ௧௩ எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.
Биће милостив ништем и убогом, и душе ће јаднима спасти.
14 ௧௪ அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.
Од преваре и насиља искупиће душе њихове, и скупа ће бити крв њихова пред очима његовим.
15 ௧௫ அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
Они ће добро живети, и донеће му злато из Шаве; и свагда ће се молити за њега, и сваки ће га дан благосиљати.
16 ௧௬ பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.
Биће пшенице на земљи изобила; по врховима горским лелујаће се класје њено као ливанска шума, и по градовима цветаће људи као трава на земљи.
17 ௧௭ அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.
Име ће његово бити увек; докле тече сунца, име ће његово расти. Благословиће се у њему, сви ће га народи звати блаженим.
18 ௧௮ இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
Благословен Господ Бог, Бог Израиљев, који један чини чудеса!
19 ௧௯ அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
И благословено славно име Његово увек! Славе Његове напуниће се сва земља. Аман и амин.
20 ௨0 ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
Свршише се молитве Давида, сина Јесејевог.