< சங்கீதம் 71 >
1 ௧ யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
O OE, e Iehova, ka'u mea e hilinai ai: Aole au e hoohokaia mai.
2 ௨ உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும்.
E hoola mai ia'u, ma kou pono, E hoopakele hoi oe ia'u: E haliu mai i kou pepeiao ia'u a e hoola ia'u.
3 ௩ நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர்.
E lilo mai oe i pohaku e noho ai no'u, Kahi e holo mau ai au; Ua kauoha ae nei oe e hoola ia'u; No ka mea, o oe no ko'u pohaku me ko'u pakaua.
4 ௪ என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
E ko'u Akua, e hoopakele mai oe ia'u i ka lima o ka poe aia, Mai loko aku o ka poho lima o ka mea hewa aloha ole.
5 ௫ யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும், என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர்.
No ka mea, o oe no ko'u mea e manaolana ai, e ka Haku; E Iehova, ka mea au i hilinai ai, mai ko'u wa opiopio.
6 ௬ நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
Nau no wau i hookupaa, mai ka opu mai; O oe no ka i lawe ia'u mai loko mai o na naau o ko'u makuwahine: Nou mau aku no hoi ko'u hoolea ana.
7 ௭ அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர்.
Me he mea kupanaha la au i ka lehulehu; Aka, o oe ko'u wahi paa e malu ai.
8 ௮ என்னுடைய வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
E piha ko'u waha i ka hoolea nou, A me kou nani a po ka la.
9 ௯ முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
Mai kiola ae oe ia'u i ka wa elemakule; Aole hoi e haalele mai ia'u i ka pau ana o ko'u ikaika.
10 ௧0 என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி, என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
No ka mea, ke olelo ku e mai nei ko'u poe enemi ia'u; A ua ohumu pu ka poe hoohalua no kuu uhane,
11 ௧௧ தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள்.
I mai la, Ua haalele mai ke Akua ia ia: E alualu oukou ia ia, a e hopu ia ia; No ka mea, aohe mea hoola.
12 ௧௨ தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
E ke Akua, mai hoomamao aku ia'u; E ko'u Akua, e wikiwiki mai e kokua ia'u.
13 ௧௩ என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும்.
E hoohilahilaia, a e pau e hoi ka poe ku e mai i kuu uhane; E uhiia me ka hoinoia a me ka hoahewaia ka poe imi i hewa no'u.
14 ௧௪ நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
Aka, e lana mau ko'u naau, A e hoomahuahua'e au i ko'u hoolea ana ia oe.
15 ௧௫ என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியவில்லை.
E hoike aku ko'u waha i kou pono, a me kou ola a po ka la: No ka mea, aole au i ike i ko laila helu'na.
16 ௧௬ யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
E hele no wau ma ka ikaika o ka Haku Iehova; E hoolea au i kou pono, o kou wale no.
17 ௧௭ தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
E ke Akua, ua ao mai oe ia'u mai ko'u wa opiopio: A ua hai aku au i kau mau hana kupanaha a hiki i keia wa.
18 ௧௮ இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக.
Ano hoi i ko'u elemakule ana me ka poohina, E ke Akua, mai haalele mai ia'u; A hoike e aku au i kou ikaika i keia hanauna, A i kou mana hoi, i na mea a pau e hiki mai ana.
19 ௧௯ தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
He kiekie loa kou pono, e ke Akua, Ka mea i hana i na mea nui; E ke Akua, owai la ka mea like me oe?
20 ௨0 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.
E ka mea i hoike iho nei ia'u i ka pilikia ana he nui wale, E hooikaika hou mai no oe ia'u, A e hoopuka ia'u mailoko o na wahi hohonu o ka honua.
21 ௨௧ என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
E hoomahuahua ae oe i ko'u nui ana, A e hooluolu mai ia'u ma kela aoao, ma keia aoao.
22 ௨௨ என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
E hula aku au ia oe me ka violaumi, I kou oiaio hoi, e ko'u Akua; E himeni aku hoi au ia oe me ka lira, E ka mea hoano o ka Iseraela.
23 ௨௩ நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
E hauoli nui ko'u mau lehelehe i ko'u oli ana ia oe; A me ko'u uhane au i hoola mai nei.
24 ௨௪ எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
Eia hoi, e kamailio aku kuu alelo i kou pono a po ka la; No ka mea, ua hoka, ua hoohilahilaia ka poe imi i hewa no'u.