< சங்கீதம் 7 >

1 பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல். என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும்.
[Psalm lal David, su el Onkakin nu sin LEUM GOD, ke sripal Cush, sie Mwet Benjamin] O LEUM GOD, God luk, nga tuku nu yurum tuh kom in karinginyu; Langoeyula ac moliyula lukelos nukewa su ukweyu.
2 எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாததால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
Kom fin tia, elos ac tulakinyula ac sreyuwi Oana soko lion sulallal, Yen wangin mwet ac fah ku in moliyula.
3 என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,
O LEUM GOD luk, fin pwaye lah nga oru kutena sin ma inge: Pouk fin oru ma tafongla,
4 என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
Ku nga fin orala ma koluk nu sin mwet kawuk luk, Ku kunausla mwet lokoalok luk ke wangin sripa,
5 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)
Na lela mwet lokoalok luk in ukweyu ac sruokyuwi. Lela elos in sisyuwi nu infohk uh ac uniyuwi, Ac filiyuwi ngan oan misa infohk uh.
6 யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
O LEUM GOD, tuyak ke kasrkusrak lom, Ac lain folo lun mwet lokoalok luk! Mukuiyak ac kasreyu! Kom lungsum nununku suwohs,
7 மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
Ke ma inge, orani mwet nukewa nu yurum, Tuh kom in nununkalos lucng me.
8 யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும்.
Kom pa nununku mwet nukewa. O LEUM GOD, wiyu lac ke kom nununkeyu, Mweyen kom etu lah wangin mwetik.
9 துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; நீதிமானை நிலைநிறுத்தும்; நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.
Kom sie God suwoswos Ac kom nununku nunak lasr ac ma lungse lasr. Kutongya orekma lun mwet koluk Ac sang ma lacne nu sin mwet wo.
10 ௧0 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
God El mwe loeyuk luk. El molelos su aksol.
11 ௧௧ தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.
God El oru nununku suwoswos Ac El kwase mwet koluk.
12 ௧௨ அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
Elos fin tia auliyak, Na God El ac fah tamla cutlass natul, Ac akoela mwe pisr natul.
13 ௧௩ அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.
El srukak mwe mweun natul Ac ngasla mwe pisr firir natul.
14 ௧௪ இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
Liye ke mwet koluk elos lungse sramtauk pwapa koluk; Elos purakak lokoalok ac kiapu mwet.
15 ௧௫ குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
Tusruktu mwe kwasrip elos akoo nu sin mwet saya, Elos sifacna sremla kac.
16 ௧௬ அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும்.
Ke ma inge elos akkeokyeyuk ke ma koluk lalos sifacna, Ac akngalyeyuk ke sulallal lalos.
17 ௧௭ நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Nga sang kulo nu sin LEUM GOD ke nununku suwohs lal; Nga on ac kaksakin LEUM GOD Fulatlana.

< சங்கீதம் 7 >