< சங்கீதம் 7 >
1 ௧ பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல். என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும்.
Оплакване на Давида, което той пя Господу поради думите на вениаминеца Хус. Господи Боже мой, на Тебе уповавам; Спаси ме от всичките ми гонители, и избави ме;
2 ௨ எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாததால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
Да не би да скъса като лъв душата ми И я раздере без да се намери избавител.
3 ௩ என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,
Господи Боже мой, ако съм сторил аз това, - Ако има в ръцете ми беззаконие,
4 ௪ என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
Ако съм въздал зло на онзи, който бе в мир с мене, Или съм обрал онзи, който ми е без причина гонител,
5 ௫ எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)
То нека подгони неприятелят душата ми и я стигне, Нека стъпче в земята живота ми. И нека повали в пръстта славата ми. (Села)
6 ௬ யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
Стани, Господи, в гнева Си; Подигни се срещу яростта на противниците ми, И събуди се заради мене, Ти, Който се отредил съда.
7 ௭ மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
И нека събраните племена те обикалят; И Ти се върни да седнеш на високо над тях.
8 ௮ யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும்.
Господ съди племената; Съди и мене, Господи, според правдата ми; И според моето незлобие нека ми бъде.
9 ௯ துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; நீதிமானை நிலைநிறுத்தும்; நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.
Нека се спре вече беззаконието на нечестивите; А праведният утвърди Ти, Боже праведни, Който изпитваш сърцата и вътрешностите.
10 ௧0 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
Моята защита е в Бога, Който избавя ония, които са с право сърце.
11 ௧௧ தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.
Бог е праведен съдия, Да! Бог Който се гневи всеки ден на нечестивия.
12 ௧௨ அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
Ако се не обърне нечестивия, Той ще изостри меча Си; Запънал и приготвил е лъка Си.
13 ௧௩ அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.
Приготвил е против него и смъртоносни оръжия; Прави стрелите си огнени стрели.
14 ௧௪ இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
Ето, нечестивият е в мъки да роди беззаконие, Зачена нечестие и роди лъжа.
15 ௧௫ குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
Изкопал е ров и направил го дълбок; Но той сам ще падне в ямата, която направи.
16 ௧௬ அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும்.
Нечестието му ще се върна на самата негова глава, И насилието му ще слезе на самото негово теме.
17 ௧௭ நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Аз ще хваля Господа за Неговата правда, И ще възпявам името на Всевишния Господ.