< சங்கீதம் 68 >
1 ௧ இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று. தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
Motindog unta ang Dios, pagapatlaagon unta ang iyang mga kaaway; Mangalagiw usab unta gikan sa iyang atubangan kadtong nanagdumot kaniya.
2 ௨ புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு நெருப்புக்கு முன்பு உருகுவதுபோல துன்மார்க்கர்கள் தேவனுக்குமுன்பாக அழிவார்கள்.
Ingon sa aso nga ginapalid, pagapapahawaon mo (sila) Ingon sa tao nga matunaw sa atubangan sa kalayo, Mao man ang pagkahanaw sa mga dautan diha sa presencia sa Dios.
3 ௩ நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
Apan papaglipaya ang mga matarung; papaghimayaa (sila) sa atubangan sa Dios: Oo, papagmayaa (sila) uban sa kalipay.
4 ௪ தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
Manag-awit kamo sa Dios, manag-awit kamo ug mga pagdayeg sa iyang ngalan: Pagbutang ug usa ka dalan alang kaniya nga molabay ngadto sa mga kamingawan; Si Jehova mao ang iyang ngalan; ug managhimaya kamo sa atubangan niya.
5 ௫ தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார்.
Amahan sa mga ilo, ug maghuhukom sa mga balong babaye, Mao ang Dios nga anaa sa iyang balaang puloy-anan.
6 ௬ தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
Ang Dios nagapapuyo sa mga nanag-inusara tingub sa panimalay: Siya nagapagula sa mga binilanggo ngadto sa kauswagan; Apan ang mga masukihon managpuyo sa yuta nga uga.
7 ௭ தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா)
Oh Dios, sa pag-una nimo sa atubangan sa imong katawohan, Sa pagpanaw mo latas sa kamingawan; (Selah)
8 ௮ பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.
Ang yuta mikurog, Ang mga langit mipaulan usab diha sa presencia sa Dios: Kadtong Sinai mikurog diha sa presencia sa Dios, ang Dios sa Israel.
9 ௯ தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
Ikaw, Oh Dios, nagpadala ug daghang ulan, Ikaw nagpalig-on sa imong panulondon, sa diha nga kini naluya na.
10 ௧0 உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
Ang imong katilingban nagpuyo didto: Ikaw, Oh Dios, nagtagana gikan sa imong kaayo alang sa mga kabus.
11 ௧௧ ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
Ang Ginoo nagahatag sa pulong: Ang kababayen-an nga nanagmantala sa mga balita, maoy usa ka dakung panon.
12 ௧௨ சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
Ang mga hari sa kasundalohan nanagpangalagiw, (sila) nanagpangalagiw; Ug ang babaye nga nahabilin sa balay nagabahin sa inagaw.
13 ௧௩ நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாவின் இறக்கைகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
Sa diha nga magahigda kamo sa taliwala sa mga toril sa carnero, Kini maingon sa mga pako sa usa ka salampati nga sinapawan sa salapi, Ug ang iyang mga dagang uban sa madalag nga bulawan.
14 ௧௪ சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது.
Sa panahon nga patlaagon sa Makagagahum ang mga hari dinha, Maingon niadto sa diha nga kini naputi ingon sa nieve sa Salmon.
15 ௧௫ தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது; பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது.
Ang usa ka bukid sa Dios mao ang bukid sa Basan; Bukid nga hataas ang bukid sa Basan.
16 ௧௬ உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்; ஆம், யெகோவா இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார்.
Ngano nga nagtan-aw kamo nga may pagtamay, Oh kamo nga mga bukid nga hatag-as, Niining bukid nga gitinguha sa Dios alang sa iyang puloy-anan? Oo, si Jehova magapuyo niini sa walay katapusan.
17 ௧௭ தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாக இருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்ததைபோல அவைகளுக்குள் இருக்கிறார்.
Ang mga carro sa Dios may kaluhaan ka libo, bisan linibo sa mga linibo: Ang Ginoo anaa sa taliwala nila, maingon didto sa Sinai, diha sa balaang puloy-anan.
18 ௧௮ தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
Ikaw mikayab sa itaas, ikaw mipagula sa mga binihag; Midawat ka ug mga gasa sa taliwala sa mga tawo, Oo, sa taliwala sa mga masukihon usab, aron magapuyo si Jehova nga Dios uban kanila.
19 ௧௯ எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா)
Dalayegon ang Ginoo nga sa matag-adlaw nagapas-an sa atong palas-anon, Bisan ang Dios nga mao ang atong kaluwasan. (Selah)
20 ௨0 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
Ang Dios maoy usa ka Dios sa mga kaluwasan alang kanato: Ug kang Jehova nga Ginoo iya ang kagawasan gikan sa kamatayon.
21 ௨௧ மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
Apan ang Dios magahampak pinaagi sa ulo sa iyang mga kaaway, Ang buhokan nga alimpulo sa nagalakaw anaa gihapon sa iyang kasal-anan.
22 ௨௨ உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,
Ang Ginoo miingon: Gikan sa Basan pagapabalikon ko pagusab, Pagapabalikon ko (sila) pag-usab gikan sa kahiladman sa dagat;
23 ௨௩ என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
Aron pagadugmokon mo (sila) tinuslob ang imong tiil diha sa dugo, Aron ang dila sa imong mga iro makabaton sa ilang bahin gikan sa imong mga kaaway.
24 ௨௪ தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.
Nakita nila ang imong mga pagpanaw, Oh Dios, Bisan ang mga pagpanaw sa akong Dios, sa akong Hari, ngadto sa balaang puloy-anan.
25 ௨௫ முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.
Ang mga mag-aawit nanag-una, ang mga magtotogtog nanagsunod, Sa kinataliwad-an sa mga dalaga nga nanagpatunog sa mga magagmayng tambor.
26 ௨௬ இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Da gon ninyo ang Dios sulod sa mga katilingban, Bisan ang Ginoo, kamo nga anaa sa tuboran sa Israel.
27 ௨௭ அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
Didto anaa ang batan-ong Benjamin nga ilang punoan, Ang mga principe sa Juda ug ang ilang mga magtatambag, Ang mga principe sa Zabulon, ang mga principe sa Nephtali.
28 ௨௮ உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும்.
Ang imong Dios nagsugo sa imong kusog; Palig-ona, Oh Dios, kadtong imong gibuhat alang kanamo.
29 ௨௯ எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக, ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
Tungod sa imong templo didto sa Jerusalem Ang mga hari managdala ug mga gasa nganha kanimo.
30 ௩0 நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார்.
Badlonga ang mananap nga ihalas sa mga tangbo, Ang panon sa mga lakeng vaca, uban sa mga nating vaca sa mga katawohan, Nga nagatamak sa mga tinibook nga salapi: Iyang gipatlaag ang mga katawohan nga nagakalipay sa gubat.
31 ௩௧ பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையை உயர்த்த துரிதப்படும்.
Moanhi ang mga principe gikan sa Egipto; Ang Ethiopia magadali sa pagbayaw sa iyang mga kamot ngadto sa Dios.
32 ௩௨ பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
Pag-awit kamo ngadto sa Dios, kamong mga gingharian sa yuta: Oh pag-awit kamo ug mga pagdayeg ngadto sa Ginoo; (Selah)
33 ௩௩ ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார்.
Alang kaniya nga nagasakay sa ibabaw sa mga langit sa kalangitan, nga gikan pa sa karaang panahon; Ania karon, nagahatag siya sa iyang tingog, usa ka gamhanang tingog.
34 ௩௪ தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
Ipahinungod ninyo ang kalig-on ngadto sa Dios: Ang iyang pagkahalangdon anaa sa ibabaw sa Israel, Ug ang iyang gahum anaa sa kapanganuran.
35 ௩௫ தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Oh Dios, ikaw makalilisang gikan sa imong mga balaang dapit: Ang Dios sa Israel, siya nagahatag ug kusog ug gahum ngadto sa iyang katawohan. Dalayegon ang Dios.