< சங்கீதம் 67 >

1 இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,
Zborovođi. Uza žičana glazbala. Psalam. Pjesma. Smilovao nam se Bog i blagoslovio nas, obasjao nas licem svojim,
2 தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)
da bi sva zemlja upoznala putove tvoje, svi puci tvoje spasenje!
3 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Neka te slave narodi, Bože, svi narodi neka te slave!
4 தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)
Nek' se vesele i kliču narodi, jer sudiš pucima pravedno i narode vodiš na zemlji.
5 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
Neka te slave narodi, Bože, svi narodi neka te slave!
6 பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
Zemlja plodom urodila! Bog nas blagoslovio, Bog naš!
7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
Bog nas blagoslovio! Neka ga štuju svi krajevi svjetski!

< சங்கீதம் 67 >