< சங்கீதம் 64 >
1 ௧ இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
達味詩歌,交與樂官。 天主,求您傾聽我哀訴的聲音,從仇敵的恐嚇中保全我生命。
2 ௨ துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
求您掩護我遠離惡人的陰險,使我脫免作奸犯科者的暴亂;
3 ௩ அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
他們磨礪自己的舌頭有如刀劍,他們吐出有毒的語言有如弓箭:
4 ௪ மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.
暗地裏向無辜的人擊撾,肆無忌憚,突然將他刺殺。
5 ௫ அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
他們彼此激勵行惡,互相商議暗佈羅網;說:看見我們的究竟是誰?
6 ௬ அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
誰能查出我們的邪思﹖我們已作成精密陰謀,走近的人必墜入深溝。
7 ௭ ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
但是,天主必要用箭射擊他們,他們必要突然身受創痕。
8 ௮ அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.
他們的舌頭必使自己跌仆,凡見到他們的人都必搖頭。
9 ௯ எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
眾人要恐懼,要傳述天主的作為,他們也都要細心默思他的事跡。
10 ௧0 நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.
義人必要喜樂於上主,向他投靠,心地正直的人,必要因此而歡躍。