< சங்கீதம் 63 >
1 ௧ யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல். தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.
Боже! Ти си Бог мој, к Теби раним, жедна је Тебе душа моја, за Тобом чезне тело моје у земљи сувој, жедној и безводној.
2 ௨ இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
Тако бих Те угледао у светињи, да бих видео силу Твоју и славу Твоју.
3 ௩ உயிரைவிட உமது கிருபை நல்லது; என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.
Јер је доброта Твоја боља од живота. Уста би моја хвалила Тебе;
4 ௪ என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.
Тако бих Те благосиљао за живота свог, у име Твоје подигао бих руке своје.
5 ௫ நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
Као салом и уљем наситила би се душа моја, и радосним гласом хвалила би Те уста моја.
6 ௬ என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
Кад Те се сећам на постељи, све ноћне страже размишљам о Теби.
7 ௭ நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
Јер си Ти помоћ моја, и у сену крила Твојих веселим се.
8 ௮ என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
Душа се моја прилепила за Тебе, десница Твоја држи ме.
9 ௯ என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
Који траже погибао души мојој, они ће отићи под земљу.
10 ௧0 அவர்கள் வாளால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Изгинуће од мача, и допашће лисицама.
11 ௧௧ ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
А цар ће се веселити о Богу, хвалиће се сваки који се куне Њим, кад се затисну уста онима који говоре лаж.