< சங்கீதம் 61 >
1 ௧ நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.
В конец, в песнех, Давиду Псалом. Услыши, Боже, моление мое, вонми молитве моей:
2 ௨ என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
от конец земли к Тебе воззвах, внегда уны сердце мое: на камень вознесл мя еси, наставил мя еси,
3 ௩ நீர் எனக்கு அடைக்கலமும், எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.
яко был еси упование мое, столп крепости от лица вражия.
4 ௪ நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
Вселюся в селении Твоем во веки, покрыюся в крове крил Твоих.
5 ௫ தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
Яко Ты, Боже, услышал еси молитвы моя, дал еси достояние боящымся имене Твоего.
6 ௬ ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Дни на дни царевы приложиши, лета его до дне рода и рода.
7 ௭ அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
Пребудет в век пред Богом: милость и истину его кто взыщет?
8 ௮ இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.
Тако воспою имени Твоему во веки, воздати ми молитвы моя день от дне.