< சங்கீதம் 61 >

1 நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.
למנצח על-נגינת לדוד ב שמעה אלהים רנתי הקשיבה תפלתי
2 என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
מקצה הארץ אליך אקרא-- בעטף לבי בצור-ירום ממני תנחני
3 நீர் எனக்கு அடைக்கலமும், எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.
כי-היית מחסה לי מגדל-עז מפני אויב
4 நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
אגורה באהלך עולמים אחסה בסתר כנפיך סלה
5 தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
כי-אתה אלהים שמעת לנדרי נתת ירשת יראי שמך
6 ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
ימים על-ימי-מלך תוסיף שנותיו כמו-דר ודר
7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
ישב עולם לפני אלהים חסד ואמת מן ינצרהו
8 இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.
כן אזמרה שמך לעד-- לשלמי נדרי יום יום

< சங்கீதம் 61 >