< சங்கீதம் 6 >

1 செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
ヱホバよねがはくは忿恚をもて我をせめ烈しき怒をもて我をこらしめたまふなかれ
2 என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
ヱホバよわれを憐みたまへ われ萎みおとろふなり ヱホバよ我を醫したまへ わが骨わななきふるふ
3 என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
わが霊魂さへも甚くふるひわななく ヱホバよかくて幾何時をへたまふや
4 திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
ヱホバよ歸りたまへ わがたましひを救ひたまへ なんぢの仁慈の故をもて我をたすけたまへ
5 மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol h7585)
そは死にありては汝をおもひいづることなし 陰府にありては誰かなんぢに感謝せん (Sheol h7585)
6 என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
われ歎息にてつかれたり 我よなよな床をただよはせ涙をもてわが衾をひたせり
7 துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
わが目うれへによりておとろへ もろもろの仇ゆゑに老ぬ
8 அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
なんぢら邪曲をおこなふ者ことごとく我をはなれよ ヱホバはわが泣こゑをききたまひたり
9 யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
ヱホバわが懇求をききたまへり ヱホバわが祈をうけたまはん
10 ௧0 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.
わがもろもろの仇ははぢて大におぢまどひ あわただしく恥てしりぞきぬ

< சங்கீதம் 6 >