< சங்கீதம் 59 >
1 ௧ இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
Přednímu z kantorů, jako: Nevyhlazujž, Davidův žalm zlatý, když poslal Saul, aby střehouc domu, zabili ho. Vytrhni mne od nepřátel mých, Bože můj; před těmi, kteříž povstávají proti mně, bezpečna mne učiň.
2 ௨ அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.
Vytrhni mne od těch, kteříž páší nepravost, a od mužů vražedlných zachovej mne.
3 ௩ இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்; யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள்.
Neb aj, zálohy činí duši mé, sbírají se proti mně mocní, bez mého provinění a bez hříchu mého, ó Hospodine.
4 ௪ என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும், ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
Beze vší mé nepravosti sbíhají se, a strojí; povstaniž mně vstříc, a popatř.
5 ௫ சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)
Sám ty, Hospodine Bože zástupů, Bože Izraelský, prociť, abys navštívil všecky národy, aniž se smilovávej nad kterým z těch převrácenců nešlechetných. (Sélah)
6 ௬ அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
Navracejí se k večerou, štěkají jako psi, a běhají okolo města.
7 ௭ இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
Aj, coť vynášejí ústy svými! Mečové jsou ve rtech jejich, nebo říkají: Zdaliž kdo slyší?
8 ௮ ஆனாலும் யெகோவாவே, நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
Ale ty, Hospodine, směješ se jim, posmíváš se všechněm národům.
9 ௯ அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
Když on moc provozuje, na tebe pozor míti budu, nebo ty, Bože, jsi hrad můj vysoký.
10 ௧0 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
Bůh mně milosrdný předejdeť mne, Bůh dá mi viděti pomstu nad nepřátely mými.
11 ௧௧ அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
Nezbijej jich, aby nezapomněl lid můj, ale zmítej jimi mocí svou, a sházej je, pavézo naše, ó Pane.
12 ௧௨ அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
Hřích úst svých, slova rtů svých, (postiženi jsouce v pýše své, pro prokletí a chřadnutí), ať vypravují.
13 ௧௩ தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி, அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்; இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா)
Zahlaď v prchlivosti, zahlaď je, ať jich není, ať poznají, že Bůh panuje v Jákobovi i do končin země. (Sélah)
14 ௧௪ அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
I nechažť se pak zase navracejí k večerou, štěkají jako psi, a běhají okolo města.
15 ௧௫ அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
Nechať těkají, a potravy hledají, však hladovití jsouce, uložiti se musejí.
16 ௧௬ நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
Já pak zpívati budu o síle tvé, hned z jitra hlasitě slaviti budu milosrdenství tvé, nebo jsi byl hrad můj vysoký, a útočiště v den ssoužení mého.
17 ௧௭ என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
A posilen jsa, žalmy tobě zpívati budu; nebo jsi Bůh, vysoký hrad můj, Bůh mně milosrdný.