< சங்கீதம் 57 >
1 ௧ தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
我をあはれみたまへ神よわれをあはれみたまへ わが霊魂はなんぢを避所とす われ禍害のすぎさるまではなんぢの翼のかげを避所とせん
2 ௨ எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
我はいとたかき神によばはん わがために百事をなしをへたまふ神によばはん
3 ௩ என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
神はたすけを天よりおくりて我をのまんとする者のそしるときに我を救ひたまはん (セラ) 神はその憐憫その眞實をおくりたまはん
4 ௪ என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.
わがたましひは群ゐる獅のなかにあり 火のごとくもゆる者 その歯は戈のごとく矢のごとくその舌はとき劍のごとき人の子のなかに我ふしぬ
5 ௫ தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
神よねがはくはみづからを天よりも高くしみさかえを全地のうへに擧たまへ
6 ௬ என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
かれらはわが足をとらへんとて網をまうく わが霊魂はうなたる かれらはわがまへに阱をほりたり而してみづからその中におちいれり (セラ)
7 ௭ என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
わが心さだまれり神よわがこころ定まれり われ謳ひまつらん頌まつらん
8 ௮ என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
わが榮よさめよ 筝よ琴よさめよ われ黎明をよびさまさん
9 ௯ ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
主よわれもろもろの民のなかにてなんぢに感謝し もろもろの國のなかにて汝をほめうたはん
10 ௧0 உமது கிருபை வானம்வரையும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
そは汝のあはれみは大にして天にまでいたり なんぢの眞實は雲にまでいたる
11 ௧௧ தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
神よねがはくは自からを天よりも高くし光榮をあまねく地のうへに擧たまへ