< சங்கீதம் 56 >
1 ௧ தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
ダビデがガテにてペリシテ人にとらへられしとき詠て「遠きところにをる音をたてぬ鴿」のしらべにあはせて伶長にうたはしめたるミクタムの歌 ああ神よねがはくは我をあはれみたまへ 人いきまきて我をのまんとし終日たたかひて我をしへたぐ
2 ௨ என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
わが仇ひねもす急喘てわれをのまんとす誇りたかぶりて我とたたかふものおほし
3 ௩ நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
われおそるるときは汝によりたのまん
4 ௪ தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
われ神によりてその聖言をほめまつらん われ神に依頼みたればおそるることあらじ肉體われになにをなし得んや
5 ௫ எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
かれらは終日わがことばを曲るなり その思念はことごとくわれにわざはひをなす
6 ௬ அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
かれらは群つどひて身をひそめ わが歩に目をとめてわが霊魂をうかがひもとむ
7 ௭ அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.
かれらは不義をもてのがれんとおもへり 神よねがはくは憤ほりてもろもろの民をたふしたまへ
8 ௮ என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
汝わがあまた土の流離をかぞへたまへり なんぢの革曩にわが涙をたくはへたまへ こは皆なんぢの冊にしるしあるにあらずや
9 ௯ நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
わがよびもとむる日にはわが仇しりぞかん われ神のわれを守りたまふことを知る
10 ௧0 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
われ神によりてその聖言をはめまつらん 我ヱホバによりてそのみことばを讃まつらん
11 ௧௧ தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
われ神によりたのみたれば懼るることあらじ 人はわれに何をなしえんや
12 ௧௨ தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.
神よわがなんぢにたてし誓はわれをまとへり われ感謝のささげものを汝にささげん
13 ௧௩ நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?
汝わがたましひを死よりすくひたまへばなり なんぢ我をたふさじとわが足をまもり生命の光のうちにて神のまへに我をあゆませ給ひしにあらずや