< சங்கீதம் 56 >

1 தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
למנצח על-יונת אלם רחקים-- לדוד מכתם באחז אותו פלשתים בגת ב חנני אלהים כי-שאפני אנוש כל-היום לחם ילחצני
2 என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
שאפו שוררי כל-היום כי-רבים לחמים לי מרום
3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
יום אירא-- אני אליך אבטח
4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
באלהים אהלל דברו באלהים בטחתי לא אירא מה-יעשה בשר לי
5 எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
כל-היום דברי יעצבו עלי כל-מחשבתם לרע
6 அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
יגורו יצפינו (יצפונו)--המה עקבי ישמרו כאשר קוו נפשי
7 அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.
על-און פלט-למו באף עמים הורד אלהים
8 என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
נדי ספרתה-אתה שימה דמעתי בנאדך הלא בספרתך
9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
אז ישובו אויבי אחור ביום אקרא זה-ידעתי כי-אלהים לי
10 ௧0 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
באלהים אהלל דבר ביהוה אהלל דבר
11 ௧௧ தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
באלהים בטחתי לא אירא מה-יעשה אדם לי
12 ௧௨ தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.
עלי אלהים נדריך אשלם תודת לך
13 ௧௩ நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?
כי הצלת נפשי ממות-- הלא רגלי מדחי להתהלך לפני אלהים-- באור החיים

< சங்கீதம் 56 >