< சங்கீதம் 54 >
1 ௧ தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
தாவீது தங்களிடம் ஒளிந்திருக்கிறான் என்று சீப்பூரார் சவுலுக்கு சொன்னபோது, கம்பியிசைக் கருவிகளுடன் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம். இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும், உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும்.
2 ௨ தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.
3 ௩ அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்; இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர் என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
4 ௪ இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்; யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.
5 ௫ அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்; உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும்.
6 ௬ உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது.
7 ௭ அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.