< சங்கீதம் 53 >
1 ௧ தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
Рече безумник у срцу свом: Нема Бога; проневаљалише се и загрдеше у безакоњу, нема никога добро да твори.
2 ௨ தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
Бог с неба погледа на синове човечије да види има ли који разуман, и тражи ли који Бога.
3 ௩ அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
Сви застранише, сви се покварише, нема никога добро да твори, нема ни једног.
4 ௪ அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
Зар неће да се оразуме који год чине безакоње, једу народ мој као што једу хлеб, и не призивају Бога?
5 ௫ உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
Дрхтаће од страха где страха нема. Јер ће Бог расути кости оних који устају на тебе. Ти ћеш их посрамити, јер их Бог одврже.
6 ௬ சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Ко ће послати са Сиона спасење Израиљу? Кад Бог поврати заробљени народ свој, радоваће се Јаков, веселиће се Израиљ.