< சங்கீதம் 50 >
1 ௧ ஆசாபின் பாடல். வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
A psalm for Asaph. The God of gods, the Lord hath spoken: and he hath called the earth. From the rising of the sun, to the going down thereof:
2 ௨ அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
Out of Sion the loveliness of his beauty.
3 ௩ நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
God shall come manifestly: our God shall come, and shall not keep silence. A fire shall burn before him: and a mighty tempest shall be round about him.
4 ௪ அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
He shall call heaven from above, and the earth, to judge his people.
5 ௫ பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
Gather ye together his saints to him: who set his covenant before sacrifices.
6 ௬ வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
And the heavens shall declare his justice: for God is judge.
7 ௭ என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
Hear, O my people, and I will speak: O Israel, and I will testify to thee: I am God, thy God.
8 ௮ உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
I will not reprove thee for thy sacrifices: and thy burnt offerings are always in my sight.
9 ௯ உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
I will not take calves out of thy house: nor he goats out of thy flocks.
10 ௧0 எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
For all the beasts of the woods are mine: the cattle on the hills, and the oxen.
11 ௧௧ மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
I know all the fowls of the air: and with me is the beauty of the field.
12 ௧௨ நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
If I should be hungry, I would not tell thee: for the world is mine, and the fulness thereof.
13 ௧௩ நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Shall I eat the flesh of bullocks? or shall I drink the blood of goats?
14 ௧௪ நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
Offer to God the sacrifice of praise: and pay thy vows to the most High.
15 ௧௫ ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
And call upon me in the day of trouble: I will deliver thee, and thou shalt glorify me.
16 ௧௬ தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
But to the sinner God hath said: Why dost thou declare my justices, and take my covenant in thy mouth?
17 ௧௭ அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
Seeing thou hast hated discipline: and hast cast my words behind thee.
18 ௧௮ நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
If thou didst see a thief thou didst run with him: and with adulterers thou hast been a partaker.
19 ௧௯ உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.
Thy mouth hath abounded with evil, and thy tongue framed deceits.
20 ௨0 நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
Sitting thou didst speak against thy brother, and didst lay a scandal against thy mother’s son:
21 ௨௧ இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
These things hast thou done, and I was silent. Thou thoughtest unjustly that I should be like to thee: but I will reprove thee, and set before thy face.
22 ௨௨ தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
Understand these things, you that forget God; lest he snatch you away, and there be none to deliver you.
23 ௨௩ நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
The sacrifice of praise shall glorify me: and there is the way by which I will shew him the salvation of God.