< சங்கீதம் 50 >

1 ஆசாபின் பாடல். வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
Žalm Azafovi. Bůh silný, Bůh Hospodin mluvil, a přivolal zemi od východu slunce i od západu jeho.
2 அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
Z Siona v dokonalé kráse Bůh zastkvěl se.
3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
Béřeť se Bůh náš, a nebude mlčeti; oheň před ním vše zžírati bude, a vůkol něho vichřice náramná.
4 அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
Zavolal nebes s hůry i země, aby soudil lid svůj, řka:
5 பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
Shromažďte mi svaté mé, kteříž smlouvu se mnou učinili při obětech.
6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
I budou vypravovati nebesa spravedlnost jeho; nebo sám Bůh soudce jest. (Sélah)
7 என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
Slyš, lide můj, a buduť mluviti, Izraeli, a buduť tebou osvědčovati. Já zajisté Bůh, Bůh tvůj jsem.
8 உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
Nechci tě obviňovati z příčiny obětí tvých, ani zápalů tvých, že by vždycky přede mnou nebyli.
9 உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
Nevezmuť z domu tvého volka, ani z chlévů tvých kozlů.
10 ௧0 எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
Nebo má jest všecka zvěř lesní, i hovada na tisíci horách.
11 ௧௧ மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
Já znám všecko ptactvo po horách, a zvěř polní před sebou mám.
12 ௧௨ நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
Zlačním-li, nic tobě o to nedím; nebo můj jest okršlek zemský i plnost jeho.
13 ௧௩ நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
Zdaliž jídám maso z volů, a pijím krev kozlovou?
14 ௧௪ நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
Obětuj Bohu obět chvály, a plň Nejvyššímu své sliby;
15 ௧௫ ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
A vzývej mne v den ssoužení, vytrhnu tě, a ty mne budeš slaviti.
16 ௧௬ தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
Sic jinak bezbožníku praví Bůh: Což tobě do toho, že ty vypravuješ ustanovení má, a béřeš smlouvu mou v ústa svá,
17 ௧௭ அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
Poněvadž jsi vzal v nenávist kázeň, a zavrhl jsi za sebe slova má.
18 ௧௮ நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
Vidíš-li zloděje, hned s ním běžíš, a s cizoložníky díl svůj máš.
19 ௧௯ உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.
Ústa svá pouštíš ke zlému, a jazyk tvůj skládá lest.
20 ௨0 நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
Usazuješ se, a mluvíš proti bratru svému, a na syna matky své lehkost uvodíš.
21 ௨௧ இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
To jsi činil, a já mlčel jsem. Měl-liž jsi ty se domnívati, že já tobě podobný budu? Nýbrž trestati tě budu, a představímť to před oči tvé.
22 ௨௨ தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
Srozumějtež tomu již aspoň vy, kteříž se zapomínáte na Boha, abych snad nepochytil, a nebyl by, kdo by vytrhl.
23 ௨௩ நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
Kdož obětuje obět chvály, tenť mne uctí, a tomu, kdož napravuje cestu svou, ukáži spasení Boží.

< சங்கீதம் 50 >