< சங்கீதம் 5 >
1 ௧ புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், என்னுடைய தியானத்தைக் கவனியும்.
Чуј, Господе, речи моје, разуми помисли моје.
2 ௨ நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
Слушај вику моју, царе мој и Боже мој! Јер се Теби молим, Господе!
3 ௩ யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
Ујутру слушаш глас мој, ујутру стојим пред Тобом, и чекам.
4 ௪ நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
Јер си Ти Бог који неће безакоња; у Тебе нема места ко је зао.
5 ௫ வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர்.
Безбожници неће изаћи пред очи Твоје; Ти ненавидиш све који чине безакоње.
6 ௬ பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.
Потиреш лажљивце; на крвопиоце и лукаве мрзи Господ.
7 ௭ நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
А ја по великој милости Твојој улазим у дом Твој, и клањам се у светој цркви Твојој са страхом Твојим.
8 ௮ யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
Господе! Води ме у правди својој; ради непријатеља мојих поравни преда мном пут свој.
9 ௯ அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.
Јер нема у устима њиховим истине; у њима је неваљалство; грло им је гроб отворен; на језику им је дволичење.
10 ௧0 தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே.
Боже! Не дај им напретка, нека се разбију помисли њихове. За многа неваљалства њихова обори их, јер се побунише на Тебе.
11 ௧௧ உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.
Па ће се радовати сви који се у Те уздају; довека ће се веселити које Ти заклањаш; дичиће се који љубе име Твоје.
12 ௧௨ யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
Јер Ти, Господе, благосиљаш праведника, као штитом заклањаш га милошћу својом.