< சங்கீதம் 49 >
1 ௧ கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.
Для дириґента хору. Синів Коре́євих. Псалом. Слухайте це, всі наро́ди, візьміть до ушей, усі ме́шканці все́світу,
2 ௨ பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள்.
і лю́дські сини й сини му́жів, ра́зом багатий та вбогий,
3 ௩ என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
— мої уста казатимуть мудрість, думка ж се́рця мого — розумність,
4 ௪ என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
нахилю́ своє ухо до при́казки, розв'яжу́ свою за́гадку лі́рою!
5 ௫ என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?
Чому маю боятись у день лихолі́ття, як стане круг мене неправда моїх ошука́нців,
6 ௬ தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற,
які на бага́тство своє покладають надію, і своїми доста́тками хва́ляться?
7 ௭ ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
Але жодна люди́на не ви́купить брата, не дасть його ви́купу Богові, —
8 ௮ அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.
бо ви́куп їхніх душ дорогий, і не перестане навіки, —
9 ௯ அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.
щоб міг він ще жити навіки й не бачити гро́бу!
10 ௧0 ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
Та люди побачать, що мудрі вмирають так само, як гинуть невіглас та не́ук, і лиша́ють для інших багатство своє.
11 ௧௧ தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள்.
Вони ду́мають, ніби доми́ їхні навіки, місця́ їхнього заме́шкання — з роду до роду, імена́ми своїми звуть землі,
12 ௧௨ ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
та не зостається в пошані люди́на, — подібна худобі, що гине!
13 ௧௩ இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)
Така їхня дорога — глупо́та для них, та за ними йдуть ті, хто кохає їхню думку. (Се́ла)
14 ௧௪ ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol )
Вони зі́йдуть в шеол, — і смерть їх пасе, немов вівці, а праведники запанують над ними від ра́ння; подоба їхня знищиться, шео́л буде мешканням для них. (Sheol )
15 ௧௫ ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol )
Та визволить Бог мою душу із влади шео́лу, бо Він мене ві́зьме! (Се́ла) (Sheol )
16 ௧௬ ஒருவன் செல்வந்தனாகி, அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
Не лякайся, коли багатіє люди́на, коли збі́льшується слава дому її, —
17 ௧௭ அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
бо, вмираючи, не забере вона всьо́го, її слава не пі́де за нею!
18 ௧௮ அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும்,
Хоч вона свою душу за життя свого хва́лить, і славлять тебе, як для себе ти чиниш добро, —
19 ௧௯ அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான்.
вона при́йде до роду батьків своїх, що світла вони не побачать навіки!
20 ௨0 மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
Люди́на в пошані, але нерозумна, — подібна худобі, що гине!