< சங்கீதம் 49 >

1 கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.
Przedniejszemu śpiewakowi z synów Korego psalm. Słuchajcie tego wszystkie narody; bierzcie to w uszy wszyscy mieszkający na okręgu ziemi!
2 பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள்.
Tak z ludu pospolitego, jako z ludzi zacnych, tak bogaty jako ubogi!
3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
Usta moje będą opowiadały mądrość, a myśl serca mego roztropność.
4 என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
Nakłonię do przypowieści ucha mego, wyłożę przy harfie zagadkę moję.
5 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?
Przeczże się mam bać we złe dni, aby mię nieprawość tych, którzy mię depczą, miała ogarnąć?
6 தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற,
Którzy ufają bogactwom swoim, a w mnóstwie dostatków swoich chlubią się.
7 ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
Gdyż brata swego nikt żadnym sposobem nie odkupi, ani może dać Bogu okupu jego zań.
8 அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.
(Albowiem drogi jest okup duszy ich, i nie może się ostać na wieki.)
9 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.
Aby żył na wieki, a nie oglądał grobu.
10 ௧0 ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
Bo widzimy, iż i mądrzy umierają, głupi i szalony zarówno giną, a zostawiają, obcym bogactwa swoje.
11 ௧௧ தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள்.
Myślą, że domy ich są wieczne, a przybytki ich trwają od narodu do narodu; przetoż je nazywają od imion swych na ziemi.
12 ௧௨ ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
Ale człowiek we czci nie zostaje, podobnym będąc bydlętom, które giną.
13 ௧௩ இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)
Takowa myśl ich głupstwem ich jest, a przecież potomkowie ich pochwalają to usty swemi. (Sela)
14 ௧௪ ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். (Sheol h7585)
Jako owce w grobie złożeni będą, śmierć ich strawi; ale sprawiedliwi panować będą nad nimi z poranku, a kształt ich zniszczony będzie w grobie, gdy ustąpią z mieszkania swego. (Sheol h7585)
15 ௧௫ ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) (Sheol h7585)
Ale Bóg wykupi duszę moję z mocy grobu, gdy mię przyjmie. (Sela) (Sheol h7585)
16 ௧௬ ஒருவன் செல்வந்தனாகி, அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
Nie bójże się, gdy się kto zbogaci, a gdy się rozmnoży sława domu jego.
17 ௧௭ அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
Bo umierając nie weźmie nic z sobą, ani za nim zstąpi sława jego.
18 ௧௮ அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும்,
A choć duszy swej za żywota swego pobłaża i chwalono go, gdy sobie dobrze czynił:
19 ௧௯ அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான்.
Przecież musi iść za rodziną ojców swych, a na wieki nie ogląda światłości.
20 ௨0 மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
Owóż człowiek, który jest we czci, a nie zrozumiewa tego, podobny jest bydlętom, które giną.

< சங்கீதம் 49 >