< சங்கீதம் 48 >
1 ௧ கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல். யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
科辣黑後裔的詩歌。 在我們天主的城池中,上主至大,應受到讚頌。
2 ௨ வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.
祂的聖山巍峨高聳,是普世的歡喜,北方中心熙雍聖山,是大王的城邑。
3 ௩ அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
天主居於堡壘的中央,顯自己為穩固的保障。
4 ௪ இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
請看,眾王紛紛相聚,他們蜂擁走向前去,
5 ௫ அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
他們一見,驚魂喪膽,張惶失措,抱頭鼠竄。
6 ௬ அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
他們在那裡惶懼恐怖,苦痛有如臨盆的孕婦;
7 ௭ கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
好像塔爾史士的船隻,為強烈的東風所襲擊。
8 ௮ நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
在萬軍上主的城裏,即我們天主的城堡,我們所見正如所聞:天主必使城堡永固。
9 ௯ தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
天主,我們在你的殿裏,沉思默念著你的仁慈。
10 ௧0 தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
天主,你的名號遠達地極,你受的讚美亦應該如此。你的右手全充滿了正義,
11 ௧௧ உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
願熙雍山因你的公正而喜樂;猶大女子也要因此歡欣踴躍。
12 ௧௨ சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
你們環繞熙雍巡遊,你們數點她的城樓,
13 ௧௩ பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
觀察她的城廓,巡視她的碉堡,是為叫你們向後代子孫陳述:
14 ௧௪ இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.
天主的確是偉大的天主,也永遠是我們的天主,始終領導我們的天主。