< சங்கீதம் 47 >

1 கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல். எல்லா மக்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
Svi narodi, zaplještite rukama, pokliknite Bogu glasom radosnijem.
2 உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
Jer je višnji Gospod strašan, car veliki nad svom zemljom.
3 மக்களை நமக்கு கீழ்படுத்தி, தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
Pokori nam narode i plemena pod noge naše.
4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
Izbra nam dostojanje naše, krasotu Jakova, koji mu omilje.
5 தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
Ide Bog uz podvikivanje, Gospod uz glas trubni.
6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
Pojte Bogu, pojte; pojte caru našemu, pojte;
7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
Jer je Bog car od sve zemlje, pojte pjesmu.
8 தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
Bog caruje nad narodima; Bog sjedi na svetom prijestolu svom.
9 மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமான தேவன்.
Knezovi narodni sastavljaju se s narodom Boga Avramova. Jer su štitovi zemaljski Božiji. Da je uzvišen!

< சங்கீதம் 47 >