< சங்கீதம் 43 >

1 தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.
Dosudi mi pravo, Bože, i povedi parbu moju protiv čeljadi bezbožne, izbavi me od čovjeka zlobna i opaka!
2 என் பெலனாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
Jer ti si, Bože, zaklon moj: zašto me odbacuješ? Zašto obilazim žalostan, pritisnut dušmanima?
3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.
Pošlji svjetlost svoju i vjernost: nek' me vode, nek' me dovedu na tvoju svetu goru, u šatore tvoje!
4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
I pristupit ću Božjem žrtveniku, Bogu, radosti svojoj. Harfom ću slaviti tebe, Bože, o Bože moj!
5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Što si mi, dušo, klonula i što jecaš u meni? U Boga se uzdaj, jer opet ću ga slaviti, spasenje svoje, Boga svog!

< சங்கீதம் 43 >