< சங்கீதம் 43 >
1 ௧ தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.
JUSGAYO, O Yuus, ya unsangan y mumujo contra y nasion ni y ti manjonggue: O coneyo gui manmandadague, yan y manaelaye na taotao.
2 ௨ என் பெலனாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
Sa jago Yuus y ninasiñajo; jafa na unrechasa? ya fafa mina tristeyo pot y chiniguit y enemigo?
3 ௩ உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.
O tago y mananamo, yan y minagajetmo; ya uesgaejonyo: ya uchuleyo asta y santos na egsomo, yan y tabetnaculumo.
4 ௪ அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
Sa bae jujalom gui attat Yuus, y as Yuus nae gaegue y dangculon minagofjo; Ja jutuna jao yan y atpa, O Yuus, Yuusso.
5 ௫ என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Jafa na dumilog jao, O antijo? yan jafa na estotba jao gui jinalomjo? Nangga si Yuus; sa bae jutuna güe, ni y inayuda nu y matajo, yan y Yuusso.