< சங்கீதம் 41 >

1 இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல். பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார்.
Fún adarí orin. Saamu Dafidi. Ìbùkún ni fún ẹni tí ó ń ro ti aláìní: Olúwa yóò gbà á ní ìgbà ìpọ́njú.
2 யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை.
Olúwa yóò dáàbò bò ó yóò sì pa ọkàn rẹ̀ mọ́: yóò bùkún fún un ní orí ilẹ̀ kò sì ní fi sílẹ̀ fún ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀.
3 படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.
Olúwa yóò gbà á lórí àkéte àìsàn rẹ̀ yóò sì mú un padà bọ̀ sípò kúrò nínú àìsàn rẹ̀.
4 யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
Ní ti èmi, mo wí pé “Olúwa, ṣàánú fún mi; wò mí sàn, nítorí pé mo ti ṣẹ̀ sí ọ”.
5 அவன் எப்பொழுது சாவான், அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.
Àwọn ọ̀tá mi ń sọ̀rọ̀ mi nínú àrankàn, pé, “Nígbà wo ni yóò kú, ti orúkọ rẹ̀ yóò sì run?”
6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.
Nígbàkígbà tí ẹnìkan bá wá wò mí, wọn ń sọ̀rọ̀ ẹ̀tàn, nígbà tí àyà rẹ̀ bá kó ẹ̀ṣẹ̀ jọ sí ara rẹ̀; nígbà tí ó bá jáde lọ yóò sì máa tàn án kálẹ̀.
7 என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து,
Àwọn ọ̀tá mi gbìmọ̀ papọ̀ nípa mi; èmi ni wọ́n ń gbìmọ̀ ibi sí,
8 தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
wọ́n wí pé, “Ohun búburú ni ó dì mọ́ ọn ṣinṣin àti ní ibi tí ó dùbúlẹ̀ sí, kì yóò dìde mọ́.”
9 என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.
Pàápàá, ọ̀rẹ́ mi tímọ́tímọ́, ẹni tí mo gbẹ́kẹ̀lé, ẹni tí ó ń jẹ nínú oúnjẹ mi, tí gbé gìgísẹ̀ rẹ̀ sókè sí mi.
10 ௧0 யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.
Ṣùgbọ́n ìwọ Olúwa, ṣàánú fún mi; gbé mi sókè, kí ń ba lè san fún wọn.
11 ௧௧ என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன்.
Èmi mọ̀ pé inú rẹ̀ dùn sí mi, nítorí ọ̀tá mi kò borí mi.
12 ௧௨ நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
Bí ó ṣe tèmi ni ìwọ dì mímú nínú ìwà òtítọ́ mi ìwọ sì gbé mi kalẹ̀ níwájú rẹ títí láé.
13 ௧௩ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். ஆமென், ஆமென்.
Olùbùkún ni Olúwa, Ọlọ́run Israẹli, láé àti láéláé.

< சங்கீதம் 41 >