< சங்கீதம் 39 >
1 ௧ எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல். என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
I SAID, I will take heed to my ways, that I sin not with my tongue: I will keep my mouth with a bridle, while the wicked is before me.
2 ௨ நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது;
I was dumb with silence, I held my peace, even from good; and my sorrow was stirred.
3 ௩ என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
My heart was hot within me, while I was musing the fire burned: then spake I with my tongue,
4 ௪ யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
Lord, make me to know mine end, and the measure of my days, what it is; that I may know how frail I am.
5 ௫ இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
Behold, thou hast made my days as an handbreadth; and mine age is as nothing before thee: verily every man at his best state is altogether vanity. (Selah)
6 ௬ நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான்.
Surely every man walketh in a vain shew: surely they are disquieted in vain: he heapeth up riches, and knoweth not who shall gather them.
7 ௭ இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை.
And now, Lord, what wait I for? my hope is in thee.
8 ௮ என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம்.
Deliver me from all my transgressions: make me not the reproach of the foolish.
9 ௯ நீரே இதைச் செய்தீர் என்று நான் என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.
I was dumb, I opened not my mouth; because thou didst it.
10 ௧0 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
Remove thy stroke away from me: I am consumed by the blow of thine hand.
11 ௧௧ அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா)
When thou with rebukes dost correct man for iniquity, thou makest his beauty to consume away like a moth: surely every man is vanity. (Selah)
12 ௧௨ யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.
Hear my prayer, O Lord, and give ear unto my cry; hold not thy peace at my tears: for I am a stranger with thee, and a sojourner, as all my fathers were.
13 ௧௩ நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
O spare me, that I may recover strength, before I go hence, and be no more.