< சங்கீதம் 38 >
1 ௧ நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல். யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
Псалом Давиду, в воспоминание о субботе. Господи, да не яростию Твоею обличиши мене, ниже гневом Твоим накажеши мене:
2 ௨ உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; உமது கை என்னைத் தாங்குகிறது.
яко стрелы Твоя унзоша во мне, и утвердил еси на мне руку Твою.
3 ௩ உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
Несть изцеления в плоти моей от лица гнева Твоего, несть мира в костех моих от лица грех моих.
4 ௪ என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
Яко беззакония моя превзыдоша главу мою, яко бремя тяжкое отяготеша на мне.
5 ௫ என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
Возсмердеша и согниша раны моя, от лица безумия моего.
6 ௬ நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
Пострадах и слякохся до конца, весь день сетуя хождах:
7 ௭ என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது; என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
яко лядвия моя наполнишася поруганий, и несть изцеления в плоти моей.
8 ௮ நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
Озлоблен бых и смирихся до зела, рыках от воздыхания сердца моего.
9 ௯ ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
Господи, пред Тобою все желание мое, и воздыхание мое от Тебе не утаися.
10 ௧0 என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.
Сердце мое смятеся, остави мя сила моя, и свет очию моею, и той несть со мною.
11 ௧௧ என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
Друзи мои и искреннии мои прямо мне приближишася и сташа.
12 ௧௨ என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
И ближнии мои отдалече мене сташа, и нуждахуся ищущии душу мою: и ищущии злая мне глаголаху суетная, и льстивным весь день поучахуся.
13 ௧௩ நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும், ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
Аз же яко глух не слышах, и яко нем не отверзаяй уст своих:
14 ௧௪ காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
и бых яко человек не слышай и не имый во устех своих обличения.
15 ௧௫ யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
Яко на Тя, Господи, уповах, Ты услышиши, Господи Боже мой.
16 ௧௬ அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.
Яко рех: да не когда порадуютмися врази мои: и внегда подвижатися ногам моим, на мя велеречеваша.
17 ௧௭ நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்; என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
Яко аз на раны готов, и болезнь моя предо мною есть выну.
18 ௧௮ என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.
Яко беззаконие мое аз возвещу и попекуся о гресе моем.
19 ௧௯ என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
Врази же мои живут и укрепишася паче мене, и умножишася ненавидящии мя без правды:
20 ௨0 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
воздающии ми злая воз благая оболгаху мя, зане гонях благостыню.
21 ௨௧ யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
Не остави мене, Господи Боже мой, не отступи от мене:
22 ௨௨ என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.
вонми в помощь мою, Господи спасения моего.