< சங்கீதம் 30 >
1 ௧ ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
Utenzi wa kuweka wakfu hekalu. Zaburi ya Daudi. Nitakutukuza wewe, Ee Bwana, kwa kuwa umeniinua kutoka vilindi, na hukuacha adui zangu washangilie juu yangu.
2 ௨ என் தேவனாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
Ee Bwana, Mungu wangu, nilikuita unisaidie na wewe umeniponya.
3 ௩ யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். (Sheol )
Ee Bwana, umenitoa Kuzimu, umeniokoa nisishuke kwenye shimo la mauti. (Sheol )
4 ௪ யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவரைப் புகழ்ந்துபாடி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
Mwimbieni Bwana, enyi watakatifu wake; lisifuni jina lake takatifu.
5 ௫ ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; மாலையில் அழுகை வரும், அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
Kwa maana hasira yake ni ya muda mfupi, bali upendo wake hudumu siku zote. Inawezekana kilio kiwepo usiku kucha, lakini asubuhi kukawa na furaha.
6 ௬ நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
Nilipofanikiwa nilisema, “Sitatikiswa kamwe.”
7 ௭ யெகோவாவே, உம்முடைய தயவினால் நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
Ee Bwana, uliponijalia, uliuimarisha mlima wangu, lakini ulipouficha uso wako nilifadhaika.
8 ௮ நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
Kwako wewe, Ee Bwana, niliita, kwa Bwana niliomba rehema:
9 ௯ யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாக இரும்; யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
“Kuna faida gani katika kuangamia kwangu? Katika kushuka kwangu shimoni? Je, mavumbi yatakusifu? Je, yatatangaza uaminifu wako?
10 ௧0 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.
Ee Bwana, unisikie na kunihurumia, Ee Bwana, uwe msaada wangu.”
11 ௧௧ என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.
Uligeuza maombolezo yangu kuwa kucheza, ulinivua nguo za gunia ukanivika shangwe,
12 ௧௨ என் தேவனாகிய யெகோவாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
ili moyo wangu uweze kukusifu na usikae kimya. Ee Bwana Mungu wangu, nitakushukuru milele.