< சங்கீதம் 3 >
1 ௧ தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.
Ry Iehovà, Akore ty fitomboa’ o mpamorefore ahikoo! Maro ty miongake hiatreatre ahy.
2 ௨ தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)
Lako ty manao ty hoe ty amako: Tsy ama’e ty fandrombahan’ Añahare. Selà
3 ௩ ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
Fa Ihe, ry Iehovà, ro kalan-defo mañohoñ’ ahy, ty engeko naho ty Mpampiandra ty lohako.
4 ௪ நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
Ie koiheko am-peo t’Iehovà, le janjiñe’e amy vohi’e miavakey. Selà
5 ௫ நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; யெகோவா என்னைத் தாங்குகிறார்.
Màndre iraho vaho miroro; tsekake amy te mpañimba ahy t’Iehovà.
6 ௬ எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் நான் பயப்படமாட்டேன்.
Tsy hembañako i lahiale miarikoboñe hiatreatre ahikoy.
7 ௭ யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை காப்பாற்றும். நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
Miongaha, ry Iehovà! Rombaho iraho ry Andrianañahareko, fa fonga tinampifi’o ty valañorà’ o rafelahikoo; vaho pinekapeka’o ty nife’ o lo-tserekeo.
8 ௮ ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா)
Am’ Iehovà ty fandrombahañe; naho am’ondati’oo ty fitahia’o. Selà